வண்ணதாசன் (Vannadaasan) என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி (Kalyanji) என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், எஸ்.கல்யாணசுந்தரம் (S.Kalayanasundaram). இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், ‘தீபம்’ இதழில் எழுதத் துவங்கியவர். 1962ல் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதையுலகம் பிரியமும் கருணையும் நிரம்பியது. சக மனிதர்களின் மீதான அன்பும், அன்றாட வாழ்வு தரும் நெருக்கடியை மீறி மனிதன் நெகிழ்வுறும் அபூர்வ கணங்களைப் பதிவு செய்வதும் இவரது எழுத்தின் வலிமையாகச் சொல்லலாம்.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.
ஆக்கங்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- மனுஷா மனுஷா
- கனிவு
- நடுகை
- உயரப் பறத்தல்
- கிருஷ்ணன் வைத்த வீடு
விருதுகள்
கலை
- கலைமாமணி